Christian Youth is forcefully tonsured to convert back to Hinduism in Orissa
பதிந்தவர் SnapJudge மேல் அக்டோபர் 9, 2006
கிறிஸ்தவ இளைஞருக்கு மொட்டை: ஒரிசா கிராமத்தில் பதற்றம்
புவனேசுவரம், அக். 9:கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்த இளைஞரை மீண்டும் இந்து மதத்தில் சேர்ப்பதற்காக வலுக்கட்டாயமாக மொட்டையடித்ததால் ஒரிசா கிராமத்தில் பதற்றம் நிலவுகிறது.
ஒரிசா மாநிலம் பத்ராக் மாவட்டத்தில் உள்ளது கோகுல்பூர் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சன் தங்குவா. இவர் கோகுல்பூரில் உள்ள பிரபாகர் பரிக் என்ற கிறிஸ்தவரின் வீட்டுக்கு அடிக்கடி போவாராம். அங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் பிரார்த்தனைகளில் பங்குபெறுவாராம்.
இந்நிலையில் கடந்த 2 ம் தேதி ரஞ்சனின் வீட்டுக்கு சிலர் வந்துள்ளனர். அவரை பக்கத்திலிலுள்ள கோபாலதோஹராவுக்கு வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர். அங்கு அவரது தலையை மொட்டையடித்து இந்து மதத்தில் மீண்டும் சேர்க்கும் நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.
இதையடுத்து கோகுல்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் பதட்டம் நிலவுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து பிரபாகர் பரிக் என்பவர் போலீஸில் புகார் செய்தார். அதைத் தொடர்ந்து அந்தப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
நடந்த சம்பவம் குறித்து ரஞ்சனின் குடும்பத்தினர் எதுவும் கூற மறுத்துவிட்டனர். இளைஞர் மொட்டையடிக்கப் பட்டதற்கு இந்திய கிறிஸ்தவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
