Indian Journalists Association – Officebearers
பதிந்தவர் SnapJudge மேல் செப்டம்பர் 19, 2006
இந்திய பத்திரிகைகள் சங்கத் தலைவராக ஹொர்முஸ்ஜி தேர்வு
பெங்களூர், செப். 19: இந்திய பத்திரிகைகள் உரிமையாளர்கள் சங்கத் தலைவராக ஹொர்முஸ்ஜி என். கமா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்திய பத்திரிகை உரிமையாளர்கள் சங்கத்தின் 67-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் பெங்களூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதுவரை இச்சங்கத் தலைவராக இருந்த ஜேகப் மாத்யூ (மலையாள மனோரமா) பதவிக் காலம் முடிவடைந்ததையடுத்து புதிய தலைவர் தேர்தல் நடைபெற்றது.
இதில் 2006-07-ம் ஆண்டுக்கான பத்திரிகை அதிபர்கள் சங்க புதிய தலைவராக ஹொர்முஸ்ஜி என். கமா (பாம்பே சமாச்சார் வாரப் பத்திரிகை-மும்பை) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
துணைத் தலைவர்களாக
- பஹுபாலி எஸ். ஷா (குஜராத் சமாச்சார்)
- பரேஷ் நாத் (உமன்ஸ் எரா),
கெüரவ பொருளாளராக சுனில் டங்க், செகரட்டரி ஜெனரலாக தீபக் எஸ். ராஜா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.செயற்குழு உறுப்பினர்கள் விவரம்:
- மனோஜ் குமார் சொந்தாலியா (தினமணி),
- டாக்டர் பி.எஸ்.ஆதித்தன் (வாராந்திர ராணி),
- விவேக் கோயங்கா (இந்தியன் எக்ஸ்பிரஸ், மும்பை),
- விஜய் தர்டா (லோக்மாத்),
- மேமன் மாத்யூ (மலையாள மனோரமா),
- விஜய்குமார் சோப்ரா (பஞ்சாப் கேசரி, ஜலந்தர்),
- பிரதீப் ஜி.பவார் (சாகல்),
- சேகர் குப்தா (இந்தியன் எக்ஸ்பிரஸ், புதுதில்லி), உள்பட பலர் செயற்குழு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
