Uganda Peace Making Process
பதிந்தவர் SnapJudge மேல் ஆகஸ்ட் 30, 2006
உகண்டாவில் போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது
![]() |
|
| உகண்டா கிளர்ச்சிக்காரர்கள் |
20 லட்சம் மக்களின் இடப்பெயர்வுக்குக் காரணமான 20 வருட காலப் போருக்குப் பின்னர், உகண்டா அரசாங்கத்துக்கும் லோர்ட் றெசிஸ்டன்ஸ் ஆர்மி எனப்படும் கிளர்ச்சிக்குழுவுக்கும் இடையே ஒரு போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது.
இறுதித் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் தொடருகின்ற அதேவேளையில், தெற்கு சுடானில் உள்ள இரண்டு சந்திப்பிடங்களுக்கு கிளர்ச்சிக்காரர்கள் செல்வதற்கான பாதுகாப்புடனான வழி ஒன்றுக்கு உறுதி வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய தலைவரான யோவெரி முஸெவேனிக்கு விசுவாசமான படைகளால், உகண்டாவின் இரண்டு முன்னாள் அதிபர்கள் தோற்கடிக்கப்பட்ட போது, 1980இல் லோர்ட் றெஸிஸ்டன்ஸ் ஆர்மி அமைப்பினர் தமது போராட்டத்தை ஆரம்பித்தனர்.
ஒரு மதத் தலைவரின் கீழ் ஒரு குறுகிய காலம் கடந்த பின்னர், ஜோசப் கோனி பதவியேற்றார்.
லோர்ட் றெஸிஸ்டன்ஸ் ஆர்மி அமைப்பை, படுகொலைகள், அங்கவீனப்படுத்தல், பல்லாயிரக்கணக்கான சிறார்களை கடத்தி போர்படையில் சண்டையிடச் செய்தல் அல்லது பாலியல் அடமைகளாக பயன்படுத்தல் ஆகிய காரணங்களுகாக அவர் மதிப்பிழக்கச் செய்தார்.

