Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Pluto loses Planetary Status – Three More Inducted

பதிந்தவர் SnapJudge மேல் ஆகஸ்ட் 25, 2006

புளூட்டோ அந்தஸ்து இழந்தது

சூரியக் குடும்பத்தில் ஒன்றான புளூட்டோவை கிரகம் என்ற அந்தஸ்திலிருந்து கீழே இறக்க வானியல் நிபுணர்கள் தீர்மானித்திருக்கிறார்கள்.

புளூட்டோ கிரகம்
பதவி இழந்த புளூட்டோ

76 ஆண்டுகளுக்கு முன்னர், 1930 ல் முதற்தடைவையாக கண்டுபிடிக்கப்பட்ட நாள் தொடக்கம், புளூட்டோ,கிரகங்களில் ஒன்பதாவது கிரகமாக கருதப்பட்டு வந்திருக்கிறது.

அனைத்துலக வானியல் ஆய்வுக் கழகம் செக் குடியரசின் தலைநகரான பிராக் நகரில் தனது பேரவைக் கூட்டத்தை நடத்திய போது, கிரகம் என்கிற அந்தஸ்திலிருந்து புளூடடோவை கீழே இறக்கியிருக்கிறது.

அயன வெளியில் காணப்படும் உருவில் சிறிய கிரகங்களில் ஒன்றாகவே புளூட்டோ இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பிபிசியின் விஞ்ஞானத் துறை முகவர் கருத்து வெளியிடும் போது, மிகச் சக்தி வாய்ந்த தொலை நோக்கிகள் மூலம் அயன வெளியில் புதிய விடயங்கள் பல இருப்பது கவனிக்கப்பட்டது என்றும் பி 313 என்று இப்போதைக்கு பெயரிடப்பட்டுள்ள ஒரு கிரகம் புளூட்டோவை விட உருவில் பெரியது என்றும் தெரிவித்துள்ளார்.

 

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>