Loganathan Cremated
பதிந்தவர் SnapJudge மேல் ஆகஸ்ட் 15, 2006
சுட்டுக் கொல்லப்பட்ட லோகனாதனின் உடல் தகனம்
கடந்த சனிக்கிழமையிரவு அவரது இல்லதில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கை அரச சமாதான செயலகப் பிரதிச் செயலாளர் நாயகம், கேதீஸ்வரன் லோகநாதனின் தகனக் கிரியைகள் இன்று மாலை பொரளை கனத்தை இந்து மயானத்தில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இடம்பெற்றது.
![]() |
|
| லோகநாதனின் உடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி |
கொழும்பு கலா பவனத்தில் நேற்றையதினம் வைக்கப்பட்டிருந்த அன்னாரது பூதவுடலிற்கு அரச அதிகாரிகள், அமைச்சர்கள் சிலர், வெளி நாட்டுத்தூதுவர்கள், இராஜதந்திரிகள், புத்திஜீவிகள், சமாதான செயலகப் பணியாளர்கள் மற்றும் நண்பர்கள் எனப்பலரும் தத்தமது இறுதி மரியாதையினைச் செலுத்தியிருந்தனர்.
லோகநாதனின் பூதவுடல் பொரளையிலுள்ள ஜயரத்ன மலர்சாலைக்கு எடுத்துச் செல்லப்படுவதற்கு முன்னதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவும் நேரில் சென்று தனது இறுதி மரியாதையினைச் செலுத்தினார்.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முன்னாள் உறுப்பினரான லோகநாதன், திம்புப்பேச்சுவார்த்தைகளிலும் கலந்து கொண்டிருந்தார் என்பதோடு, பின்னர் பத்திரிகைத்துறையிலும், அதன் பின்னர் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் என்ற தன்னார்வ அமைப்பின் பணிப்பாளராகவும் இருந்தார் என்பதும், இவ்வருட இறுதியில்தான் இவரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ அரச சமாதான செயலகப் பிரதிச் செயலாளராக நியமித்திருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

