Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Aircraft Blast plot foiled

பதிந்தவர் SnapJudge மேல் ஆகஸ்ட் 11, 2006

பாதுகாப்பு உசார் நிலை தொடருகிறது
பாதுகாப்பு உசார் நிலை தொடருகிறது

பிரிட்டன் விமான நிலையங்களில் தொடர்ந்தும் அதியுயர் உசார்நிலை

அமெரிக்காவிற்கு பறக்கும் பயணிகள் விமானங்களை தகர்ப்பதற்கு திட்டம் தீட்டியதாக இருபத்து நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதினை அடுத்து, பிரிட்டனில் அதிகாரபூர்வமான எச்சரிக்கை அளவானது, ‘தீவிரம்’ என்பதிலே நீடிக்கும் என பிரித்தானிய உள்த்துறை அமைச்சர் ஜான் ரெய்டு தெரிவித்துள்ளார்.

முக்கியமான சந்தேக நபர்கள் அனைவரும் தங்களின் பிடியில் இருப்பதாக அதிகாரிகள் நம்பிக்கையாக இருப்பதாக செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்த அவர், ஆனால் தன்னால் அதற்கு உறுதி கூற முடியாது என தெரிவித்தார்.

மேலும் இந்த விசாரணையின் போது ஒத்துழைப்பு கொடுத்த நாடுகள், குறிப்பாக பாகிஸ்தானுக்கு தனது நன்றியினையும் அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் பத்தொன்பது பேரின் நிதிச் சொத்துக்களை முடக்கியுள்ள பேங்க் ஆஃப் இங்கிலாந்து அவர்களின் பெயர்களையும் வெளியிட்டுள்ளது.

இந்த நபர்களின் வயது பதினேழு முதல் முப்பதைந்து வரையில் இருக்கின்றது. இவர்களில் பெரும்பாலனவர்கள் இருபது வயது பருவத்தினராக இருக்கின்றனர். வியாழக்கிழமையன்று கைது செய்யப்பட்ட அனைவரும் பிரித்தானியாவில் பிறந்த முஸ்லிம்கள் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


பிரிட்டன் விமான நிலைய தாமதங்கள் குறைகின்றன

பல விமான நிலையங்களில் கடுமையான பாதுகாப்பு
பல விமான நிலையங்களில் கடுமையான பாதுகாப்பு

பிரிட்டனின் விமான நிலையங்களில் இயல்பு சேவையினை கொண்டு வருவதில் தாங்கள் முன்னேற்றம் கண்டு வருவதாக பிரித்தானிய போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய பாதுகாப்பு நடவடிக்கையினால், பிரித்தானிய விமான நிலையங்களில் விமான போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது.

விமான நிறுவனங்கள் நீண்ட தூரம் செல்ல கூடிய விமான சேவைகளை ஆரம்பித்து வருகின்றன. ஆனால் குறுகிய தூர சேவைகள் இன்னும் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன.