Middle East – Environmental Impact
பதிந்தவர் SnapJudge மேல் ஆகஸ்ட் 1, 2006
மத்திய கிழக்கு மோதலால் சுற்றுச் சூழல் பாதிப்பு
மத்திய கிழக்கு பகுதியில் இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல்களினால் அங்கு ஒரு சுற்றுச் சூழல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
லெபனானுக்கு உட்பட்ட கடற்பரப்பில் ஏற்பட்டுள்ள எண்ணைக் கசிவினால் உண்டாகியுள்ள மாசுகள் தொடர்பாக ஐ நா வின் சுற்றுச் சூழல் திட்டம் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது.
![]() |
|
| தாக்குதலுக்கு உள்ளான மின் நிலையம் |
இஸ்ரேலியத் தாக்குதலுக்கு உள்ளான ஜிய்யேய் மின் நிலையத்திலிருந்து வெளியேறிய எண்ணைக் கசிவு தற்போது 80 கிலோ மீட்டர் வரை பரவியுள்ளது.
பெய்ரூட் நகருக்கு தெற்கே 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த ஜிய்யேய் மின் நிலையத்தின் மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது.
அந்த தாக்குதலிலின் போது முதலில் வந்த தகவல்களின் படி 10,000 டண்கள் மிகதிடமான கச்சா எண்ணை பாதிக்கப்பட்ட தொட்டிக்ளிலிருந்து வெளியானதாக கூற்ப்பட்டது , ஆணால் இறுதியாக 35,000 டண்கள் எண்ணை வெளியேறி இருக்கக் கூடும் என அறியப்படுகிறது.
கடற்கைரையிலிருந்து கடலை நோக்கி இந்த எண்ணை உடனடியாக வேகமாக சென்றது என லெபனானிய சுற்றுச் சூழல் அமைச்சகத்தை சேர்ந்த பெர்ஜ் ஹதிஜன் பிபிசியிடம் தெரிவித்தார்
![]() |
|
| பாதிக்கப்பட்ட அழிந்து வரும் பச்சை ஆமைகள் |
இந்த எண்ணைக் கசிவு கடற் படுகையில் படிந்துள்ளது எனவும் அது அந்தப் பகுதியில் உள்ள டூனா எனப்படும் மீன்களின் இனப்பெருக்த்தை பாதித்துள்ளது என்வும் ஜூலை மாதங்களில் குஞ்சு பொறிக்கும் அழிந்து வரும் இனமான பச்சை ஆமைகளையும் இது பாதித்துள்ளது என்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
மத்தியதரைக் கடல் பகுதியில் உள்ள பல வன விலங்குகளுக்கும் இதனால் குறிப்பிட தக்க அளவில் அபாயம் உள்ளதாகவும் ஐ நா வின் சுற்றுச் சூழல் அமைப்பு தெரிவித்துள்ளது. மோதல் தொடர்ந்தால இது பல் உள்ளூர் வாசிகளின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கக்கூடும் எனவும் ஐ நா வின் அமைப்பு கூறியுள்ளது.
இந்த எண்ணை கசிவினால் கடல் சார் சுற்றுச் சூழலுக்கு ஏற்படக் கூடிய குறுகிய கால மற்றும் நீண்ட கால தாக்கம் குறித்து கவலை கொண்டுள்ளோம் எனவும் லெபனான் தெரிவித்துள்ளது. ஏனெனில் பல மக்கள் சுற்றுலா மற்றும் மீன் பிடிப்பை தங்களது அடிப்படை வாழ்வாதாரமாக கொண்டுள்ளார்கள் என லெபனானின் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளர்க்ள்



takeiteasy365 சொன்னார்
are you sure about that dude?!